பாலஸ்தீனத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி பின்னணி வெளியாகியிருக்கிறது.
பாலஸ்தீனத்தை சேர்ந்த 25 வயதுடைய அஹ்மத் அபு மர்ஹியா என்ற இளைஞர் ஓரின சேர்க்கையாளர். சமீபத்தில் கடத்தப்பட்ட இவர் மேற்கு கரை பகுதியில் தலை துண்டிக்கப்பட்டவாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டார். ஓரினச்சேர்க்கையாளர் என்ற காரணத்தால் இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இம்மாதம் ஐந்தாம் தேதி அன்று ஹெப்ரான் பகுதியில் அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதற்கிடையில் கடந்த இரு வருடங்களாக அவர் இஸ்ரேலில் வசித்து வந்ததாகவும், தஞ்சம் கேட்டு அந்நாட்டு அரசாங்கத்திடம் மனு வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் இஸ்ரேல் குடிமகனாக கனடா நாட்டில் வாழ அவர் திட்டமிட்டிருந்தார் என்று விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
மேலும், அவர் ஓரினச் சேர்க்கையாளர் என்ற காரணத்தால் இஸ்ரேல் நாட்டிலிருந்து அவருக்கு கொலை மிரட்டல் வந்திருக்கிறது. எனினும் பாலஸ்தீன நாட்டின் ஹெப்ரான் நகரிலிருந்து அவரின் சடலம் மீட்கப்பட்டிருப்பதால் தற்போது வரை மர்மம் நீடிக்கிறது. அவரை கடத்தி கொன்றிருக்கலாம் என்று அவரின் நண்பர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
எனினும், ஹெப்ரான் பகுதிக்கு அவர் அடிக்கடி செல்வார். அப்போது அவரை அடித்துக் கொன்றிருக்காலம் என்று அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்திருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபர் கைதாகி உள்ளார்.