ஜெர்மன் நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடித்ததில் ஒரு இளைஞர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜெர்மன் நாட்டில் கொரோனோ காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களில் பட்டாசு வெடிக்க கூடாது என்று தடை அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே பட்டாசு விற்பனையும் தடை செய்யப்பட்டது. ஆனால் சில மக்கள் சட்டவிரோதமாக பட்டாசுகளை கடைகளில் வாங்கி வெடித்திருக்கிறார்கள். இதில் நாடு முழுக்க பல விபத்துகள் ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், அந்நாட்டின் Bonn என்னும் நகருக்கு அருகில் இருக்கும் Hennef என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவில் பட்டாசு வெடிக்கப்பட்டது. அப்போது விபத்து ஏற்பட்டு 37 வயதுடைய ஒரு இளைஞர் பரிதாபமாக பலியானார். மேலும் ஒரு நபருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.