Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நாளைக்கு போக முடியாது… வாலிபருக்கு ஏற்பட்ட சோகம்… குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

சேலம் மாவட்டத்தில் கிணற்றில் நீச்சல் பழகிக் கொண்டிருந்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள அழகாபுரம் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி தங்கவேல் என்ற மகன் இருந்தார். இவர் அப்பகுதியில் உள்ள மொபைல் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கவேலுக்கு நாளை பிறந்தநாள் என்பதால் ஊரடங்கும் காரணமாக இன்று மாமா வீட்டிற்கு கேக் கொடுக்க சென்றுள்ளார். அப்போது அங்குள்ள விவசாய கிணற்றில் நீச்சல் பழகி கொண்டிருந்த போது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டார்.

இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் தீயணைப்பு துறையினரை உடன் அழைத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |