Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அது குடிக்காமல் இருக்க முடியல… போதைக்காக செய்தோம்… ஊரடங்கினால் ஏற்பட்ட விளைவு…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் போதைக்காக தின்னரில் எலுமிச்சை சாற்றை கலந்து குடித்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் 2 வது பரவலை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் மதுகடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுபிரியர்கள் பரிதவித்து வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள குன்னவாக்கம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணா மற்றும் சிவசங்கர் ஆகியோருடன் ஒன்று சேர்ந்து போதைக்காக தின்னரில் எலுமிச்சை சாற்றை கலந்து குடித்துள்ளனர்.

அப்போது சங்கர் திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சங்கர் வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டார். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவசங்கர் மற்றும் கிருஷ்ணா இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுக்குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |