மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள ராமநாயக்கன்பட்டி பகுதியில் ரஞ்சித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் மாதா கோவில் அருகில் தள்ளுவண்டியில் பாஸ்ட்புட் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் வியாபாரம் முடிந்த பிறகு ரஞ்சித்குமார் கடையில் உள்ள பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பேட்டரியில் இருந்த மின்சார வயரில் ரஞ்சித்குமாரின் கை உரசியது.
இதனால் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்த ரஞ்சித்குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ரஞ்சித்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.