மனைவியை விட்டு பிரிந்த ஏக்கத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள குண்டவெளி பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெல்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விவாகரத்து கேட்டு பிரியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் மனைவியை விட்டு பிரிந்து இருப்பதால் மனமுடைந்த செல்வகுமார் தினமும் மது அருந்தியுள்ளார்.
அதன்பின் காவல் நிலையம் அருகில் இருக்கும் மரத்தில் செல்வகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று செல்வகுமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.