ரயில் மோதி இறந்து கிடந்த வாலிபரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள சானிகுளம் பகுதியில் இருக்கும் தண்டவாளத்தில் தலை மற்றும் கை துண்டிக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சென்ட்ரல் ரயில்வே காவல்துறையினர் அந்த வாலிபரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது மின்சார ரயில் மோதி வாலிபர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. அதன் பிறகு அந்த வாலிபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.