வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் கூலி தொழிலாளியான பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தாயார் செல்வி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் தனது தாய் செல்வியின் நினைவு வந்ததால் பாண்டியன் மன உளைச்சலில் இருந்து உள்ளார். இதனை அடுத்து தனது வீட்டில் பாண்டியன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டியனின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.