தந்தை இறந்த 30-வது நாளில் மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள சிவகிரி பகுதியில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருந்து செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மாதம் ஈஸ்வரனின் தந்தை முனியாண்டி உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இதனால் 30-வது நாள் வீட்டில் துக்க நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் டி.வி-க்கு கேபிள் இணைப்பு கொடுக்க ஈஸ்வரன் முயன்ற போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஈஸ்வரனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.