மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள செல்லத்தாயார்புரம் பகுதியில் அருள்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அருள்ராஜ் தனது வீட்டில் மின்விளக்குகளால் அலங்காரம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அருள் ராஜின் மீது மின்சாரம் பாய்ந்துவிட்டது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அருள்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த பாவூர்சத்திரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருள்ராஜின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.