தண்ணீரில் மூழ்கி 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மங்களமேடு பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரகாஷ் தனது நண்பர்களுடன் எசனஉடை குளத்தில் குளித்து கொண்டிருந்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரகாஷின் சடலத்தை மீட்டனர். அதன்பிறகு காவல்துறையினர் பிரகாஷின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.