Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

10 லட்ச ரூபாய் வரை செலவு…. உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்…. போலீஸ் நடவடிக்கை…!!

தவறான சிகிச்சை அளித்ததாக கூறி வாலிபரின் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி பகுதியில் மாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2-ஆம் தேதி முதல் ஒரு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த சிகிச்சைக்கு பிறகு மாரிக்கு உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து மாரியின் பெற்றோர் நாங்குநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையை பூட்டி சீல் வைத்துள்ளனர்.

இந்நிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாரியின் உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 10 லட்ச ரூபாய் வரை செலவு செய்தும் மாரியின் உயிரை காப்பாற்ற இயலவில்லை. எனவே சரியாக சிகிச்சை அளிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனையடுத்து செவிலியரான இசக்கியம்மாள் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |