Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு….. வாலிபர் எடுத்த விபரீத முடிவு….. போலீஸ் விசாரணை….!!

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குன்னூர் கிராமத்தில் தொழிலாளியான சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருக்கின்றார். தற்போது இந்த தம்பதியினர் மீனாட்சிபுரத்தில் இருக்கும் தனது உறவினர்களுடன் வசித்து வருகின்றனர். இதனை அடுத்து கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் சுப்பிரமணியன் தனது சொந்த ஊருக்கு சென்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுப்பிரமணியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |