கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சல்வார்பட்டி பகுதியில் தோட்டம் அமைந்துள்ளது. அந்த தோட்ட வேலை காரணமாக குடும்பத்தினருடன் தஞ்சாவூர் சேர்வவிடுதி பகுதியில் வசிக்கும் மகேந்திரன் என்பவர் வந்துள்ளார். இந்நிலையில் மகேந்திரன் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து மகேந்திரன் உயிரிழந்து விட்டார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி மகேந்திரனின் உடலை சடலமாக மீட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.