அறுந்து விழுந்த மின்வயரை தெரியாமல் மிதித்த டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பாலாஜி என்ற மகன் இருந்துள்ளார். இவர் மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லும் லாரியில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் 28 – ஆம் தேதியன்று பாலாஜி லாரியில் மணல்களைக் கொண்டு சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து பாலாஜி லாரிக்கு வழி காட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது கீழே அறுந்து கிடந்த மின்வயர் மீது எதிர்பாராதவிதமாக பாலாஜி மிதித்துவிட்டார். இதில் மின்சாரம் தாக்கி பாலாஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.