மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் பன்னம்பரை அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் கிடந்த பெரிய கல் மீது மோதி விட்டது. இதில் கீழே விழுந்து படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் முருகன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சாத்தான்குளம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.