கிணற்றுத் தண்ணீரில் மூச்சடக்கி பயிற்சி மேற்கொண்ட வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள சன்னாவூர் கிராமத்தில் ஆண்டனி என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல்துறையினர் சார்பில் நடத்தப்பட்ட உடல்தகுதி தேர்வில் ஆண்டனி கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றில் ஆண்டனி தண்ணீருக்குள் மூச்சடக்கி பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது மூச்சு திணறல் ஏற்பட்டு அண்டனி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த ஆண்டனியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.