Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இது தவறான உறவு” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கன்னியாகுமரியில் நடந்த சோகம்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் லாரன்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரீஜன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள கொல்லத்தில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்கியிருந்து ரீஜன் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். அப்போது அந்த வீட்டில் வசிக்கும் பெண்ணிற்கும், ரீஜனுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பெண்ணிற்கு ஏற்கனவே 3 குழந்தைகள் இருக்கின்றனர். இது குறித்து அறிந்த ரீஜனின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த ரீஜன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரீஜனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |