Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த தாயார்…. விவசாய நிலத்தில் நடந்த சம்பவம்…. வேதனையில் வாடும் குடும்பத்தினர்….!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பகுதியில் வெங்கட்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான வெங்கட்ராஜை அவரது தாயார் கண்டித்துள்ளார். இதனால் தாயுடன் சண்டையிட்டு அப்பகுதியில் இருக்கும் விவசாய நிலத்திற்கு சென்ற வெங்கட்ராஜ் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துள்ளார்.

இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வெங்கட்ராஜ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |