மனைவி இறந்த துக்கத்தில் கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டான்பாறை பகுதியில் முரளி கிருஷ்ணா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரின் மனைவி இறந்து விட்டதால் முரளிகிருஷ்ணா மன உளைச்சலில் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் முரளிகிருஷ்ணா திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முரளிகிருஷ்ணாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.