கடலில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் அகிலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிதிஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நித்திஷ் கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக அவரை மீட்க முயற்சி செய்துள்ளனர். ஆனாலும் அவரை மீட்க முடியவில்லை.
இதனையடுத்து ஆலந்தலை தூண்டில் வளைவு பாலம் கட்டும் பகுதியில் நித்திஷின் உடல் ஒதுங்கி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.