டைவ் அடிக்க முயற்சி செய்த போது தலையில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கரும்பு கடை சலமத் நகரில் ரியாசுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரிக்கல் கடை ஒன்றை சுந்தராபுரம் பகுதியில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ரியாசுதீன் அவரது வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் டைவ் அடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ரியாசுதீனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் ரியாசுதீன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஆலந்துறை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.