பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது எந்திரத்தில் சிக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள சாம்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி அமைந்துள்ளது. இந்த கல்குவாரியில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த மணிவேல் என்பவர் எந்திரத்தின் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல மணிவேல் எந்திரத்தின் மூலம் கற்களை உடைத்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக எந்திரத்தில் சிக்கி மணிவேல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிவேலின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.