Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நீச்சல் பழக சென்ற வாலிபர்…. திடீரென நடந்த துயர சம்பவம்…. தந்தையின் பரபரப்பு புகார்…!!

நீச்சல் பழகி கொண்டிருந்த கல்லூரி மாணவர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனுமந்தபுரம் பகுதியில் ஸ்ரீநாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓசூர் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் நீச்சல் பழகுவதற்காக சென்ற ஸ்ரீநாத் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து விட்டார். இதுகுறித்து கெலமங்கலம் காவல் நிலையத்தில் அவரது தந்தை சங்கராச்சாரி புகார் அளித்தார்.

அந்த  புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |