ஆற்றில் குளித்து கொண்டிருக்கும் போது தண்ணீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மகேஸ்வரன் பெரியார் நகர் பகுதியில் இருக்கும் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து விட்டார். மேலும் அங்கு மகேஸ்வரன் மட்டுமே குளித்துக் கொண்டிருந்ததால் அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது யாருக்கும் தெரியவில்லை.
இந்நிலையில் மறுநாள் காலை மகேஸ்வரனின் உடல் கரை ஒதுங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்