கேரள மாணவியை கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலத்திலுள்ள கோவளம் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி கொண்டு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை பகுதிக்கு வந்து உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் காணாமல் போன தமது மகளை கண்டுபிடித்து கொடுக்குமாறு மாணவியின் பெற்றோர் திருவல்லா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிரகாஷ் மாணவியை கடத்தி சென்று ஒரு வீட்டில் தங்க வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கேரளா போலீசார் நித்திரவிளை பகுதிக்கு விரைந்து சென்று மாணவியை மீட்டனர். அதன்பின் காவல்துறையினர் பிரகாஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.