மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் வாலிபரை கொடூரமாக அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் பிரசாந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரசாந்த் தனது நண்பரான நாகராஜ் என்பவருடன் காந்தி நகர் அருகில் இருக்கும் எரி கரைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அங்கு அமர்ந்து மது அருந்தி கொண்டிருக்கும் போது நண்பர்களுக்கும், அதே பகுதியில் வசிக்கும் 6 பேர் கொண்ட கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபம் அடைந்த அவர்கள் நண்பர்களை தாக்க முயற்சி செய்ததால் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். ஆனால் அந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் விடாமல் அவர்களை துரத்தி சென்று பிரசாந்தை சுற்றி வளைத்து விட்டனர்.
அதன்பின் அவர்கள் அங்கு கிடந்த தென்னை மட்டை, கற்கள், பீர் பாட்டில் போன்றவற்றால் பிரசாந்தை சரமாரியாக தாக்கியதால் படுகாயமடைந்த பிரசாந்த் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து அந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் பிரஷாந்த் மீது ஏறி அமர்ந்து கல்லால் அவர் தலையில் அடித்து கொடூரமாக கொலை செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரசாந்தை கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.