சகோதரர்கள் இணைந்து வாலிபரை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள திருவான்மியூர் பகுதியில் விக்கி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் திருவான்மியூர் சிக்னல் அருகே இருக்கும் எல்.பி சாலையில் விக்கி நடந்து சென்ற போது 2 மர்ம நபர்கள் அவரை சுற்றி வளைத்தனர். அதன் பிறகு மர்ம நபர்கள் விக்கியை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் படுகாயமடைந்த விக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விக்கியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கோபி, அவருடைய சகோதரர் அஜித், சூர்யா மற்றும் விக்னேஷ் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் கோபியின் தம்பியான அஜித் என்பவரை விக்கி அடிக்கடி கிண்டல் செய்து அடித்து உதைத்துள்ளார். இதனை தட்டிக் கேட்க சென்ற கோபியையும் விக்கி தாக்கியுள்ளார். இதனால் கோபமடைந்தார் கோபியும், அஜித்தும் இணைந்து விக்கியை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர்.