படிப்பதற்காக லண்டன் வந்த இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்மேற்கு லண்டனில் உள்ள Richard Upon Thames பள்ளிக்கு அருகே Hazrat Wali (18) என்ற இளைஞன் நடைபாதையில் நடந்த மோதலில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதாவது சம்பவத்தன்று Hazrat Wali என்ற இளைஞனுக்கும், அங்கிருந்த மற்ற நபர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தால் நடைபாதையில் நடந்த மோதலில் அந்த இளைஞர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். இந்த நிலையில் Richard Upon Thames பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் CPR செய்து Hazrat Wali-ஐ காப்பாற்ற முயற்சித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட வேண்டாம் என்று காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஏனென்றால் உயிரிழந்த அந்த இளைஞனுடைய குடும்பம் அவருடைய இழப்பால் கடும் வேதனையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே “Hazrat Wali நல்ல பையன், ஆப்கானிஸ்தானிலிருந்து படிப்பதற்காக இங்கு வந்தார்” என்று அவருடைய உறவினர் ஒருவர் கூறியுள்ளார். மேலும் அந்த இளைஞனுடைய குடும்பத்தினர் ஆப்கானிஸ்தானில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதேசமயம் இந்த கொலை சம்பவம் தொடர்பில் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஆனால் இந்த கொலை சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை அன்று மாலை 4.45 மணியளவில் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த இளைஞனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அந்த இளைஞன் 5.54 மணியளவில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானில் உள்ள அவரது குடும்பத்தினருக்கும் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.