Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இவங்க பண்ணிருப்பாங்களோ…? வாலிபருக்கு நடந்த கொடூரம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

வாலிபரை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வீராட்சி மங்கலம் பகுதியில் கோபிநாத் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை நேரத்தில் வீட்டிலிருந்து வெளியேறிய இந்த வாலிபரை மர்ம நபர்கள்  கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த தாராபுரம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் காவல்துறையினர் கடைசியாக கோபிநாத்தின் செல்போனை தொடர்பு கொண்டு பேசிய அந்த நபர் யார் என்பது குறித்தும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |