ஹோட்டல் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக ஒரு ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். இவர் வீடு கட்டுவதற்காக அதிக அளவு கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் ஆறுமுகத்தினால் கடனைத் திருப்பிக் கட்ட முடியாமல் மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஆறுமுகம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனி அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.