மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிச்சையம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு செந்தில் குமார் என்ற மகனும், சர்மிளா சங்கீதா என்ற இரு மகள்களும் இருக்கின்றனர். இதனை அடுத்து செந்தில்குமார் வீடியோகிராபராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செந்தில் குமாரை செல்வராஜ் கண்டித்துள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான செந்தில்குமார் மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார். இது குறித்து அறிந்த செல்வராஜும் மீதமிருந்த விஷம் கலந்த மதுவை குடித்துள்ளார். இதனை அறிந்த பிச்சையம்மாள் அதிர்ச்சி அடைந்து கதறியுள்ளார். அதன் பிறகு அருகில் உள்ளவர்கள் செல்வராஜ் மற்றும் செந்தில்குமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு செல்வராஜ் செந்தில்குமாரி பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செந்தில்குமார் மற்றும் செல்வராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.