Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மன உளைச்சலின் காரணத்தினால்…. ஹோட்டல் உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு….. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

ஹோட்டல் உரிமையாளர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கருங்காலிகுப்பம் கிராமத்தில் முகமதுமொகைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாத்திமா என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் அதே பகுதியில் ஹோட்டல் வைத்து நடத்தி வந்துள்ளனர். கடந்த சில நாட்களாக பாத்திமா உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான முகமதுமொகைதீன் எலி மருந்தை குடித்துள்ளார்.

இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் முகமதுமொகைதீனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் முகமதுமொகைதீனை தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |