மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் மாறன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மாறன் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாறனின் தற்கொலை விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.