Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பெற்றோருடன் தகராறு…. கோபத்தில் வெளியேறிய வாலிபர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கனாபேரி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூர்யா என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக தனக்கு புதிதாக மோட்டார் சைக்கிளும், செல்போனும் வாங்கி தருமாறு சூர்யா பெற்றோருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் குடும்பத்தினருடன் மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபத்தில் சூர்யா வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த சூர்யா அப்பகுதியில் இருக்கும் கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சூர்யாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |