இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜொல்லம்பட்டி பகுதியில் கட்டிட மேஸ்திரியான பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கீதாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்பின் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சங்கீதா குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத சமயத்தில் சங்கீதா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காரிமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சங்கீதா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.