Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அது இல்லாம இருக்க முடியல… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மது கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்திலுள்ள இனாம்குளத்தூர் பகுதியில் கூலி தொழிலாளியான நத்தர்ஷா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான நத்தர்ஷா ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால் மது கிடைக்காமல் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இதனை அடுத்து வீட்டில் தனியாக இருந்த நத்தர்ஷா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த இனாம்குளத்தூர் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |