ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரம் பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிஷோர் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கிஷோர் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிஷோரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் கிஷோர் எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்நிலையில் பால் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை திறப்பதற்கு கிஷோர் முடிவெடுத்துள்ளார். அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்றுள்ளது. ஆனால் அதற்காக வைத்திருந்த 1 லட்ச ரூபாய் பணத்தை ஆன்லைன் விளையாட்டில் இழந்துவிட்டதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கிஷோர் அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கிஷோர் தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.