ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கதிரிபட்டி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமரேசன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பாலிடெக்னிக் படித்துள்ள குமரேசன் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்ற குமரேசன் விவசாய வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குமரேசன் தனது தம்பியான தாமோதரனின் செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியுள்ளார். அதில் தனக்கு வாழ பிடிக்கவில்லை எனவும், குடும்பத்தை பார்த்துக்கொள், நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் எனவும் குமரேசன் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து குமரேசன் தற்கொலை செய்துள்ளார். அதன் பின் குமரேசனை பல்வேறு இடங்களில் தேடி அலைந்த குடும்பத்தினர் ரயில் நிலையத்தில் அவர் சடலமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமரேசனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குமரேசன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.