Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எனக்கு வேற வழி தெரியல… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குடும்பத்தினர்…!!

மனைவியை விட்டு பிறந்தவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் விரக்தியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் விஜய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்த விஜய் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த விஜய் உருளிக்கள் எஸ்டேட் பெரியார் நகர் பகுதியில் இருக்கும் தனது பாட்டி வீட்டிற்கு சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட விஜய்க்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |