பலாமரத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள செண்ப கொல்லி ஆதிவாசி காலனியில் பாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் குடும்பத்தினருடன் இரவு தூங்கிக் கொண்டிருந்த சதீஷ் அதிகாலை நேரத்தில் திடீரென மாயமாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அனைத்து இடங்களிலும் சதீஷை தேடி பார்த்துள்ளனர். இந்நிலையில் சதீஷ் அப்பகுதியில் உள்ள ஒரு பலா மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சதீஷின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சதீஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.