ராணுவத்தில் சேர முடியாததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள மருதம்புத்தூர் பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான அருள் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ராணுவத்தில் சேருவதற்கான பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கண் பார்வை திறன் சற்று குறைவாக இருந்ததால் அருளால் இராணுவத்தில் சேர இயலவில்லை.
இதனால் மன உளைச்சலில் இருந்த அருள் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருளின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.