Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

3 நாட்களாக திறக்கப்படாத வீடு… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பூட்டிய வீட்டுக்குள் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கோபால் நகரில் வசிப்பவர் கிஷோர் பாண்டி. இவர் திண்டுக்கல்லில் ஒரு ஸ்டூடியோவில் பணி செய்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கிஷோர் பாண்டியனின் பெற்றோர் சென்னைக்கு சென்றனர். அதனால் இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு கிஷோர் பாண்டி வீட்டின் முன்பு தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து மூன்று நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார். மேலும் வீடு உள்பக்கமாக பூட்டி இருந்ததை அக்கம்பக்கத்தினர் கவனித்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த அவர்கள் திண்டுக்கல் வடக்கு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து கதவை உடைத்து பார்த்தபோது கிஷோர் பாண்டி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து அவருடைய உடலை காவல்துறையினர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். அவருடைய பெற்றோர் வந்த பிறகு அவருடைய தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

Categories

Tech |