Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இன்ஸ்டாகிராம் மூலம் காதல்…. வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் எலி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கூளநாயக்கன்பட்டி கிராமத்தில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவன கோழிப்பண்ணையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ரஞ்சித்குமார் இன்ஸ்டாகிராம் மூலம் ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இதனையடுத்து ரஞ்சித்குமாரும், அந்த பெண்ணும் தீவிரமாக காதலித்துள்ளனர். ஆனால் ரஞ்சித்குமாருக்கு உறவினர் பெண் ஒருவருடன் திருமணம் நடத்த திடீரென அவரது பெற்றோர் திட்டமிட்டுள்ளனர். அதன்படி திருமண ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்த ரஞ்சித்குமார் எலி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள்  உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ரஞ்சித்குமார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |