சேலம் மாவட்டத்தில் கோவிலில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கதிரவன் என்ற மகன் இருந்தார். இவர் ஈரோட்டில் தறித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்து கொண்டிருந்த நிலையில் அப்பகுதியிலுள்ள ஒரு கோவிலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கதிரவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.