வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்திலுள்ள திருவானைக்காவல் பகுதியில் அமலன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அமலன் திருச்சி மேலசிந்தாமணி அண்ணா சிலை அருகில் இருக்கும் ஒரு டீக்கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற விக்கி மற்றும் கார்த்தி என்ற இரண்டு வாலிபர்கள் கத்தியை காட்டி பணம் தருமாறு அமலனை மிரட்டியுள்ளனர்.
இது குறித்து அமலன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விக்கி மற்றும் கார்த்தி ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.