இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேல் விஷாரம் பகுதியில் தமிழரசன் என்பவர் வசித்துவருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் 17 வயது இளம்பெண்ணை காதலித்துள்ளார். அதன் பின் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததால் தற்போது அவர் 3 மாத கர்ப்பிணியாக இருக்கின்றார். இந்நிலையில் இளம்பெண்ணின் கர்ப்பத்திற்கு நான் காரணமில்லை என்று அந்த இளைஞன் கூறி வருகிறார்.
இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கும் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இளம் பெண்ணை ஏமாற்றி இளைஞரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.