சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு பகுதியில் சட்டவிரோதமாக சாராய விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி ஏற்காடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் காவல்துறையினருக்கு அப்பகுதியில் கணேசன் என்பவர் சாராயம் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. அதன் பின் கணேசனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.