அனுமதி இன்றி பட்டாசு தயாரித்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள வேப்பங்கொட்டை பகுதியில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் அமைந்துள்ள வீடுகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வீடுகளில் தங்கம், முனீஸ்வரன், பசும்பொன் நகரில் வசிக்கும் முனீஸ்வரன், கண்ணன் ஆகியோர் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன் பிறகு அவர்களிடமிருந்து தலா 2 கிலோ சரவெடிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.