Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேகமாக சென்ற வாலிபர்கள்….. உடல் நசுங்கி பலியான சோகம்…. சென்னையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிளில் முந்தி செல்ல முயன்ற போது பேருந்தின் சக்கரத்தில் சிக்கி 2 வாலிபர்கள் உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரத்தில் இருந்து திருவான்மியூர் நோக்கி மாநகரப் பேருந்து ஒன்றுபுறப்பட்டுள்ளது. இது துறைபாக்கம் ராஜீவ்காந்தி சாலையில் உள்ள மேட்டுகுப்பம் பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் சென்ற அரவிந்த், அஸ்வின் என்ற இரு வாலிபர்கள் பேருந்தை முந்திச் செல்ல முயற்சி செய்துள்ளனர். இதனால் முன்னால் சென்ற இரு சக்கர வாகனம் மீது இவர்களின் மோட்டார் சைக்கிள் பலமாக மோதி விட்டது.

அதன் பின் நிலை தடுமாறி கீழே விழுந்த வாலிபர்கள் மீது பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதால் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர்கள் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் சடலங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |